நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நில அளவை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கல்பனா, மாவட்ட நிர்வாகிகள் பிரபு, முருகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், ஜாக்டோ ஜியோ நிர்வாகி புகழேந்தி, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். நில அளவை அலுவலர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். நில அளவையர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நில அளவர் முதல் உதவி இயக்குனர் வரையிலான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story