காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

எலச்சிபாளையம்

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், வட்டார தலைவர் ராஜா, நகர தலைவர் குமாரபாளையம் ஜானகிராமன், பள்ளிபாளையம் ராஜேந்திரன் திருச்செங்கோடு பாலதண்டாயுதம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முரளி, மாவட்ட துணை தலைவர் காசி விஸ்வநாதன், இளங்கோ, வட்டார நிர்வாகிகள் குணசேகரன் செங்கோட்டையன், பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியை பறிக்க காரணமாக இருந்த மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story