மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை பொறுத்த வரையில்,அப்படியே ஏற்று நடைமுறைபடுத்தும் தமிழக அரசை கண்டித்து நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திட்ட தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் கோவிந்தராஜ், ஓய்வுபெற்ற அலுவலர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துகின்ற தொழிற்சாலை சட்டதிருத்த முன்மொழிவை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story