விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருச்செங்கோட்டில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

திருச்செங்கோடு

பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருச்செங்கோடு அடுத்த மொளசி பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். வக்கீல் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வலியுறுத்தியும், கொலையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்திட வலியுறுத்தியும், விவசாய பணியில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கி வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கரும்பு சோகையுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


Next Story