ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடி மற்றும் சிக்கல் பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா பொருளாளர் மினிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சுரேந்தர் பாரதி, மாவட்ட தலைவர் மாரிக்குமார், கடலாடி தாலுகா தலைவர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பா.ஜ.க. எம்.பி.யை பதவி நீக்கம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிளை தலைவர் பேச்சிமுத்து, நிர்வாகிகள் கோட்டைச்சாமி, அரவிந்த் சுரேஷ், கஜேந்திரன், முனியசாமி, பூமிநாதன், தமிழ் வேல்நாதன், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,
Related Tags :
Next Story