திருக்கோவிலூர் அருகேஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருக்கோவிலூர் அருகேஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற்ற 6-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை முறைகேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு மாதிரி பள்ளி எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் ஹரி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட தலைவர் சிவக்குமார், துணை செயலாளர் உத்திரக்கோட்டி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், வட்ட துணை செயலாளர் ஜான், மாவட்ட செயலாளர் சின்னராசு, சி.பி.எம். கட்சியின் கிளை செயலாளர் வீரன், மாவட்ட பொருளாளர் லூயிசாமேரி, மாவட்ட துணைத் தலைவர் டார்வின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகத்சிங் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை முறைகேட்டை கண்டித்தும், மாணவர் சேர்க்கையின்போது திருக்கோவிலூர் ஒன்றிய மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடவேண்டும், தனியார் பள்ளி போன்று பணம் பெற்றுக் கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story