பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகில் சிறுபான்மை நலக்குழு சார்பில் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் அ.அப்துல்காதர் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் கா.யாசர்அராபத் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், தையல் கலை தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளர் ப.செல்வன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பெ.அரிதாசு, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் அக்பர், இந்திய குடியரசு கட்சி அமைப்பு செயலாளர் வந்தை மோகன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலை கண்டித்தும், ஐ.நா.சபை தலையிட்டு அமைதியை நிலைநாட்டக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.


Related Tags :
Next Story