ராணிப்பேட்டையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதவெறி, இனவெறியை மனதில் வைத்து கொண்டு பெண்களை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் நாட்டை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், இத்தகைய செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் பல மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.