'நீட்' தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
x

‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திலகர் திடலில் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் 'நீட்' தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் காரல்மார்க்ஸ் தலைமை தாங்கினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூரப் பாண்டியன் கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது 'நீட்' தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேேபால் அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் திராவிட கழக மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story