சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்


சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
x

சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மணகெதி கிராமத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் கப்பல் குமார், கபில்ராஜ், தொகுதி செயலாளர்கள் காரை ராபர்ட், பிரபாகரன் ஆகியோர் பேசினர். திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பிரபு, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நீல.மகாலிங்கம் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, நெடுஞ்சாலைத்துறை சட்டத்திற்கு புறம்பாகவும், அரியலூர் மாவட்ட மக்களின் அன்றாட போக்குவரத்து பயணங்களுக்கு இடையூறாகவும் செயல்பட்டு வரும் மணகெதி சுங்கச்சாவடியை அகற்ற வில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story