விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் வீடு புகுந்து தாக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரியாஸ்கான், பெருவழுதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் சத்யராஜ், தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் முன்னாள் மண்டல செயலாளர் வக்கீல் வேலு.குணவேந்தன், தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட செயலாளர் பேராசிரியர் முரளிதரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடு ஏற்படாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story