சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், மணவாசியில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் கடந்த 1-ந்தேதி முதல் வாகனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.30 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து கரூர் மாநகர், புறநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சுங்கச்சாவடி முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அரவை முத்து, புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story