அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல்

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக, சென்னை வள்ளுவர்கோட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே இதை கண்டித்து அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து, அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கே.பி.பி. பாஸ்கர் தலைமை தாங்கினார்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சேகர், ராஜா என்கிற செல்வகுமார், கோபிநாத், மாவட்ட பொருளாளர் டி.எஸ்.எல்.காளியப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளி பாலுசாமி, நகர செயலாளர் சிவசிதம்பரம், நகர அவை தலைவர் விஜய்பாபு, முன்னாள் நகர செயலாளர் ஆட்டோ ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

ராசிபுரம்

இதை கண்டித்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மகளிர் அணி மாநில இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சரோஜா, நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் வேம்பு சேகரன், மாவட்ட அவைத்தலைவர் கந்தசாமி, ராசிபுரம் நகர அவை தலைவர் கோபால், நகர வங்கி துணைத் தலைவர் வெங்கடாசலம், நகர வங்கி இயக்குனர் சீரங்கன், பேரூர் செயலாளர்கள் பட்டணம் பாலசுப்பிரமணியன், பிள்ளாநல்லூர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் ஜெகன், சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் அமல்ராஜ், ஆட்டோ சங்கத் தலைவர் சீனிவாசன் உள்பட 43 பேர்களை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகர ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்லப்பன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழ ராமலிங்கம், நகர செயலாளர் அங்கமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வடக்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், நகர அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் தொகுதி கழக இணைச் செயலாளர் முரளிதரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட இந்நாள் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 61 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் நடைபெற்றது. இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு நகரச் செயலாளர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் பாஸ்கரன், துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் புருஷோத்தமன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அர்ச்சுனன், சிங்காரவேல், பன்னீர் செல்வராஜன், கணபதி, பச்சையம்மாள், வெங்கடேஷ், தனசேகர் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து குமாரபாளையம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பள்ளிபாளையம்

அதேபோல் பள்ளிபாளையம் நகர ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலைய நான்கு ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிபாளையம் முன்னாள் நகராட்சி தலைவரும் நகரச் செயலாளருமான வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். ஊராட்சி குழு உறுப்பினரும் ஒன்றிய செயலாளர் செந்தில், தொகுதி செயலாளர் சுப்ரமணி, பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், ஆனங்கூர் ஊராட்சி தலைவர் சிங்காரவேலு, புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கலியனூர், ஓடப்பள்ளி கடாச்சநல்லூர் ஊராட்சி தலைவர்கள்,¹ ஆலம்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்லதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெயா வைத்தி, சுஜாதா மாரிமுத்து, சரவணன் மற்றும் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் முகிலன், சிவகுமார், பள்ளிபாளையம் நகர கழக துணைச் செயலாளர் ஜெய் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 105 பேரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story