கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெய கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் சிறப்புரை ஆற்றினார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கால்நடை ஆய்வாளர் பயிற்சியை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையான அடுத்த கட்ட பதவிஉயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story