விழுப்புரத்தில்பா.ஜ.க. பட்டியல் அணியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் பா.ஜ.க. பட்டியல் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் கண்டன உரையாற்றினார்.
இதில் பட்டியல் அணி நிர்வாகிகள் ராஜசேகர், அங்காளன், நாகராஜ், கலையரசன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் முரளி, சதாசிவம், தலைவர் பார்த்திபன், மாவட்ட பொருளாளர் குமாரசாமி, மாவட்ட செயலாளர்கள் குபேரன், பிரியா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story