கள்ளக்குறிச்சியில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்தி.மு.க. அரசை கண்டித்து நடந்தது


கள்ளக்குறிச்சியில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்தி.மு.க. அரசை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி


மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், இதை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பெட்டிக்கடைகள் வரை விற்கப்படுவதை தடுக்கக்கோரியும் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரியா தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன், வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் பார்த்திபன், வெங்கடேசன், எத்திராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் முரளி, தங்கம், சதாசிவம், பாண்டியன், பொருளாளர்கள் குமாரசாமி, சத்யநாராயணன், மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி குபேரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அசோக்குமார், சுகுமார், விழுப்புரம் நகர தலைவர்கள் வடிவேல் பழனி, விஜயன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் சரண்யா நன்றி கூறினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மில்.அரி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் தியாகராஜன், ஜெயதுரை, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் அருள், மாநில ஓ.பி.சி.அணி செயலாளர் வக்கீல் செல்வநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் ரேகா ஆகியோர்கள் கலந்து கொண்டு, மரக்காணம் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான சம்பவத்துக்கு பொறுப்பேற்று தி.மு.க. அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.

முன்னதாக தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தாததை கண்டித்தும், அரசு மதுபான கடையை மூடக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் நிர்வாகிகள் மலையம்மா, ராதிகா, கஜேந்திரன், பிரகாஷ், பிரதீப், வில்சன், மகேந்திரன், ராஜேஷ் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் சர்தார்சிங் நன்றி கூறினார்.

1 More update

Related Tags :
Next Story