பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை பஸ் நிலையம் முன்பு புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பழைய கந்தர்வகோட்டை அருகில் உள்ள சுங்கச்சாவடியின் அதிகாரிகளை கண்டித்து பா.ம.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் ெஜய்சங்கர் தலைமை தாங்கினார். இதில் பல மாதங்களாக இரவு நேரங்களில் கடைவீதியில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதை சரி செய்ய வேண்டும்.

சாலையின் இரு புறமும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. சாலைகளில் போக்குவரத்திற்கு பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரிகின்ற மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் இந்த மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுங்கச்சாவடி அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.


Next Story