மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
x

மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்குரோடு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிர்வாக பிரிவையும், தொழில்நுட்ப பிரிவையும் ஒன்றாக இணைத்ததின் மூலம் 39 பணியிடங்கள் காலியாகிவிட்டதால், வருங்காலங்களில் பதவி உயர்வு பெறும் பொழுது பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதை தவிர்க்க கோரியும், நிர்வாக பிரிவையும், தொழில் நுட்ப பிரிவையும் ஒன்றாக இணைப்பதை கைவிட வலியுறுத்தியும், தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது என்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story