விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 1:15 AM IST (Updated: 5 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோயம்புத்தூர்



தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைளை வலியுறுத்தி கோவை காந்திபார்க் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி பாண்டியன் தலைமை தாங்கினார். இதுகுறித்து நிர்வாகிகள் கூறும்போது, தமிழக அரசின் இந்த சமய அறநிலைதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ஆலயங்களில் சாமி தங்க நகைகளை பராமரிக்க தலா ஒரு பொற்கொல்லர்யும், தேர் மற்றும் ஆலய சாமி புறப்பட வாகனங்கள் பராமரிக்க மர தச்சர் ஒருவரையும் நிரந்தர பணியாளராக அரசு நியமிக்க வேண்டும். மேலும் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.


சென்னை, கோவை, திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் தங்க நகை பூங்காக்கள் மற்றும் பர்னிச்சர், கைவினைப் பொருள்கள், விற்பனைக் கூடங்கள் அமைக்க வேண்டும். விஸ்வகர்மா சமுதாயத்தில் அனைத்து சாதியினர் மற்றும் அனைத்து மதத்தினரையும் சேர்க்க வேண்டும் என்று கூறிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தச்சு தொழில், நகை மற்றும் சிற்பத்தொழில், பாத்திரம் தயாரிக்கும் தொழில், இரும்பு வேலை செய்பவர்களுக்கு விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்க வேண்டும். சிற்ப கலையில் சிறந்து விளங்கும் விஸ்வகர்மா ஸ்தபதிகளுக்கு விருது வழங்க வேண்டும். இரும்பு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



Next Story