த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மயிலாடுதுறையில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை


மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், வழிபாட்டு உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேக்அலாவுதீன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பக்கர், முன்னாள் மாவட்ட தலைவர் ஆரிப், ஒன்றிய தலைவர் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராயல் அப்பாஸ் வரவேற்று பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் ஹாஜாகனி, தலைமை கழக பேச்சாளர் நயினார்முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மண்டல செயலாளர் வக்கீல் வேலு.குபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், சிறுபான்மையினருக்கான வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story