திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்


விழுப்புரம்

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் திண்டிவனம் பிரகாஷ் தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் அரங்க. பரணிதரன், நகர தலைவர் பூங்கான், இளைஞரணி துணை செயலாளர் தம்பி பிரபாகரன், மாவட்ட தலைவர் திண்டிவனம் அன்பழகன், நகர தலைவர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச்செயலாளர் வந்தியத்தேவன், திராவிடர் கழக விழுப்புரம் மண்டல செயலாளர் இளம்பரிதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் நிர்வாகிகள் மாரிமுத்து, பழனிவேல், பகவான்தாஸ், திருநாவுக்கரசு, கார்வண்ணன், சதீஷ், பன்னீர்செல்வம், ரமேஷ், அன்புக்கரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story