அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விழுப்புரம் மாவட்ட மையம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சு.சிவக்குமார், கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் தேசிங்கு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில பொருளாளர் அசோகன் நிறைவுரையாற்றினார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துத்துறை மாவட்ட தலைவர் அஜிஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மனோகரன், திருவேங்கடம், திருமாவளவன், தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் குப்பம்மாள், துணைத்தலைவர் பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.


Next Story