கள்ளக்குறிச்சியில்நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இந்திரகுமார், மாவட்ட துணை தலைவர் தேவராஜன், மாவட்ட இணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் செந்தில் முருகன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டமானது, நில அளவைத் துறையில் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டு வந்த புல உதவியாளர் பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் தினக்கூலி அடிப்படையில் நிரப்பப்படும் என்ற அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் செந்தில், ரவி, மகாலிங்கம், கள்ளக்குறிச்சி வட்ட நில அளவை துணை ஆய்வாளர் நந்தகோபாலகிருஷ்ணன், கோட்ட ஆய்வாளர் வெற்றிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சக்திவேல் முருகன் நன்றி கூறினார்.