உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். சம்பளத்துடன் கூடிய வாரவிடுமுறை வழங்காமல் கட்டாயமாக வார விடுப்பை மறுக்கும் நிர்வாகங்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அரசு விடுமுறை, பண்டிகை கால விடுமுறை, உள்ளூர் விடுமுறை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படவும், விடுமுறை நாட்களில் பணிப்புரிய நேரும் போது இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். 8 மணி நேர வேலையை உத்திரவாதம் செய்திட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், கையுறை, அடையாள அட்டை உள்ளிட்டவை கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளன மாநில உதவி செயலாளர் ரங்கராஜ் சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story