மாதர்-வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மாதர்-வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மாதர்-வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

லால்குடி:

லால்குடியில் ரவுண்டானா அருகில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு, ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு லால்குடி பொறுப்பாளர் விசாலாட்சி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட ஸ்ரீமதி குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.25 லட்சம் வழங்க கோரியும், ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோரை லால்குடி போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

இதேபோல் கல்லக்குடியில் பஸ் நிலையத்தில், மாணவி ஸ்ரீமதி இறந்ததற்கு சட்ட நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து புள்ளம்பாடி வட்டார இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் அந்தோணிஜார்ஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரஜினிகாந்த் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.


Next Story