முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

சமநீதி மக்கள் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து ஜமாத்தார்கள், காரைக்குடி வட்டார உலமாக்கள் மற்றும் தோழமை கட்சிகள் ஆகியவை இணைந்து 25 ஆண்டுகளாக விசாரணை கைதிகளாகவே இருக்கும் 37 முஸ்லிம்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வலியுறுத்தி 12 பள்ளி வாசல்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நீதி மக்கள் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அக்னி சகுபர் சாதிக் தலைமை தாங்கினார்.

கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச் செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், சமநீதி மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பச்சை தமிழகம் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் கார்த்தி, தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர் நத்தர் ஜெயிலானி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சிவாஜிகந்தி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.ஆர். சீனிவாசன், சமநீதி மக்கள் கழகத்தின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் வதாகணேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story