அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்


அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

தரகம்பட்டி அருகே மயிலம்பட்டியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், மற்ற அரசு மருத்துவமனைக்கு இணையாக தரத்தினை உயர்த்த வலியுறுத்தியும் தே.மு.தி.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் தாங்கினார். கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆல்வின், தெற்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தனர். கரூர் மாநகர மாவட்ட செயலாளர் அரவை முத்து கண்டன உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story