கோடநாடு வழக்கை விசாரிக்க கோரி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அ.ம.மு.க. சார்பில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரிக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மர் எம்.பி. ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அ.ம.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் நவநாதன், மூக்கையா, மாவட்ட துணை செயலாளர் கற்பகம் பழனிச்சாமி, இணைச்செயலாளர் சித்ரா, பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் முத்து முருகன் (ராமநாதபுரம் தெற்கு), கோட்டைசாமி (கிழக்கு), உடைய தேவன் (திருப்புல்லாணி), நந்திவர்மன் (ஆர்.எஸ்.மங்கலம்), சீனிமாரி (மண்டபம் கிழக்கு), சிவக்குமார் (மண்டபம் மத்தி), அழகர்சாமி (மண்டபம் மேற்கு), ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ெஜயலலிதா பேரவை செயலாளர் ராமநாதன், மகளிரணி செயலாளர் சபீனா பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோஷம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரித்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் அணி, அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.