பாமக நிர்வாகிகள் கொலையை கண்டித்து, அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளரான நாகராஜ் என்பவரை நேற்று முன் தினம் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் அவர் உயிரிழந்தார். மேலும், கடந்த 45 நாட்களில் 3 பாமக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாமக நிர்வாகிகள் கொலையை கண்டித்து, செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story