பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
x

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ் அரசு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் வந்து கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வன பாதுகாப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், வன உரிமை சட்டத்தை முழுமையாக அமாலாக்க வேண்டும், பழங்குடி மக்களின் துணை திட்டத்தின் நிதியை பழங்குடி மக்களுக்கே செலவிட வேண்டும், ஈரோடு மாவட்ட மலையாளி, புலையன், குறவன், வேட்டைக்காரன் இனங்களை பழங்குடி பட்டியலில் சேர்த்திட வேண்டும், பழங்குடியின மக்களுக்கு குடிமனை பட்டா, தொகுப்பு வீடுகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வருடங்களாக மனு கொடுத்து காத்திருக்கும் பழங்குடியின மக்களுக்கு உடனே தொகுப்பு வீடுகள் மற்றும் பட்டா வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story