பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

உடையார்பாளையம், தா.பழூரில் பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த பா.ஜனதா அரசை கண்டித்து அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன், நகர தலைவர் அக்பர் அலி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஜெயங்கொண்டம் வட்டார தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

தா.பழூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலாளர் கண்ணையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story