டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆய்வுக்கூட்டம்


டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆய்வுக்கூட்டம்
x

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுசுகாதார பிரிவில் உள்ள 210 கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் மூலம் 6 நாள் திட்ட பணியாக திட்டமிடப்பட்டு கொசுப்புழு தடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியாளர்களுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட மலேரியா அலுவலர் தையல்நாயகி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக கொசுப்புழு உற்பத்தியாக கூடிய கலன்களுடன் பயிற்சி வழங்கினார்.


Next Story