விவசாய நிலத்தை அழித்து விமான நிலையம் அமைப்பதா? - கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன பேரணி
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டனப் பேரணி நடத்தினர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டனப் பேரணி நடத்தினர்.
பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தவும் குடியிருப்புகளை அகற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருநூற்றுக்கும் மேற்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி பேரணியாக சென்று கண்டனம் தெரிவித்தனர்.
விவசாய நிலங்களையும் கிராமங்களையும் அழித்து விமான நிலையங்களை அமைக்க வேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும் மத்திய, மாநில அரசுகள் மக்களை பாதிக்காத வகையில் விமான நிலையங்களை அமைத்தால் அதை வரவேற்க தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story