மத்திய மண்டலத்தில் கைப்பற்றப்பட்ட 2 ஆயிரம் கிலோ கஞ்சா தீயில் போட்டு அழிப்பு
கடந்த 3 ஆண்டுகளில் மத்திய மண்டலத்தில் கைப்பற்றப்பட்ட 2,083 கிலோ கஞ்சா தீயில் போட்டு அழிக்கப்பட்டது.
திருச்சி:
திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகர போலீசாரால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 2,083 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை அழிக்க திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைத்து அவற்றை தீயில் போட்டு அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story