விடுமுறை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!


x

3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். கோவிலில் சாமியை தரிசனம் செய்வதற்காக பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


Next Story