விடுமுறை தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!


விடுமுறை தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
x

விடுமுறை தினம் என்பதால், இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், திரளான பக்தர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இதையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.பக்தர்கள் கடலில் புனித நீராடி, கட்டண தரிசன வரிசையிலும், இலவச தரிசன வரிசையிலும் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பக்தர்கள் முடி காணிக்கை, காவடி, அங்கபிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் குவிந்ததையடுத்து, கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.


Next Story