ஆவடி போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு: ரூ.2½ கோடி நகை-பணம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு


ஆவடி போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு: ரூ.2½ கோடி நகை-பணம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
x

ஆவடி போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு முன்னிலையில் ரூ.2½ கோடி நகை-பணம் உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

சென்னை

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள 218 பவுன் நகைகள், 100 செல்போன்கள் மற்றும் ரூ.74 லட்சம் பணம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நபர்களிடம் டி.ஜி.பி. சைலேந் திரபாபு முன்னிலையில் போலீசார் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பாராட்டி பரிசு, சான்றிதழ்கள் அவர் வழங்கினார். மேலும் தீங்கு விளைவிக்காத மிளகு ஏவுதல் துப்பாக்கி, ரப்பர் பந்து லாஞ்சர் மற்றும் உடலில் அணியும் கேமரா உள்ளடக்கியவைகளின் செயல்முறை விளக்கம் மற்றும் பயன்பாட்டை பார்வையிட்டார். இந்தநிகழ்ச்சியில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து சைலேந்திரபாபு நிருபர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதே போன்று கள்ளச்சாராய விற்பனை கட்டுப்பாட்டில் உள்ளது. லாக்-அப்பில் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன, ஆபரேஷன் 2.0 கஞ்சா விற்பனையில் ஏற்கனவே 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.


Next Story