தர்மபுரியில்மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் செல்வம் வரவேற்றார். மாநில பொருளாளர் நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஜி.எஸ்.டி.யில் இருந்து அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு முழுவிலக்கு அளிக்க வேண்டும். தரமற்ற மருந்துகளை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான மருந்து விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story