சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

நாகையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகை அவுரித்திடலில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அருளேந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராஜீ, மாநில தலைவர் அந்துவன்சேரல் ஆகியோர் பேசினர். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்தி விட்டு அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தி கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.


Next Story