முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா? - ப.சிதம்பரம் கேள்வி


முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா? - ப.சிதம்பரம் கேள்வி
x

கோப்புப்படம்

முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

செருப்பு வீச்சு சம்பவத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கோரிய பா.ஜனதா மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், பா.ஜனதாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் பா.சரவணனை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்நிலையில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து சரவணன் விலகியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள கேள்வி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "

பா ஜ க வில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்தார்.

டாக்டர் சரவணனைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார்.

முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா?

வாழ்க சுதந்திரம்!" என்று அதில் பதிவிட்டுள்ளார்.



1 More update

Next Story