மோகனூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் மர்மசாவு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்


மோகனூர் அருகே  கிராம நிர்வாக அலுவலர் மர்மசாவு  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்
x

மோகனூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் மர்மசாவு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே ஆண்டாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கிராம நிர்வாக அலுவலர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள என்.தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகன் கடந்த 3 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ஆண்டாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவருடைய குடும்பத்தினர் தட்டக்கல் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனால் வேல்முருகன் ஆண்டாபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாப்பாத்தி, வேல்முருகனை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என வேல்முருகன் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ஆண்டாபுரம் கிராம நிர்வாக அலுவலகம் திறந்து இருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமமக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பு

இதையடுத்து வருவாய் துறையினர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேல்முருகனை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆண்டாபுரம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று இறந்த வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story