விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி


விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி
x

விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் ஜக்குபட்டி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 43). எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். விடுமுறையில் தர்மபுரிக்கு வந்த கஜேந்திரன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தர்மபுரி- அரூர் சாலையில் ராஜா பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story