காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலி முதியவர் படுகாயம்

காவேரிப்பட்டணம் அருகே  விபத்தில் தையல் தொழிலாளி பலி  முதியவர் படுகாயம்
x

காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலியானார். முதியவர் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலியானார். முதியவர் படுகாயம் அடைந்தார்.

தையல் தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருேக உள்ள வேதாரம்பட்டியை சேர்ந்தவர் அருள் (வயது 28). தையல் தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் காலை கும்பாரஅள்ளியை சேர்ந்த ராஜகோபால் (60) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

விசாரணை

அப்போது சப்பாணிப்பட்டியில் கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி அருள் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அருள் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த ராஜகோபாலை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story