அண்ணன் மகளுக்கு நீச்சல் கற்று கொடுத்தபோது கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
அண்ணன் மகளுக்கு நீச்சல் கற்று கொடுத்தபோது கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
மோகனூ
அண்ணன் மகளுக்கு நீச்சல் கற்று கொடுத்தபோது கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.
விவசாய கிணறு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே என்.புதுப்பட்டி ஊராட்சி ஜங்களாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 52). இவருக்கு சக்திவேல் (28), சரத்குமார் (25) என்ற 2 மகன்கள் இருந்தனர். சக்திவேலுக்கு திருமணமாகி சஞ்சு பிரசாந்த் என்ற மகனும், மிதுனா ஸ்ரீ (11) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சரத்குமார் நேற்று காலை சஞ்சு பிரசாந்த், மிதுனா ஸ்ரீ ஆகியோரை அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்து சென்று நீச்சல் கற்று கொடுத்தார். இதையடுத்து சஞ்சு பிரசாந்தை கிணற்றில் இருந்து மேலே ஏற்றி விட்டார். பின்னர் மிதுனா ஸ்ரீயை மேலே தூக்கி விட்டபோது எதிர்பாராதவிதமாக அவள் தவறி மீண்டும் கிணற்றுக்குள் விழுந்தாள்.
பரிதாப சாவு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரத்குமார் தண்ணீரில் குதித்து நீரில் மூழ்கிய மிதுனா ஸ்ரீயை காப்பாற்றி மேலே ஏற்றி விட்டபோது திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த சிறுமி சத்தம் போட்டாள். இதனை கேட்டு அங்கு சென்ற அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிணற்றில் மூழ்கிய சரத்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரத்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து கோவிந்தன் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.