மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி


மோகனூர் அருகே   கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

நாமக்கல்

மோகனூர்:

நாமக்கல் அடுத்த என்.கொசவம்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 62). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆயில் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மோகனூர் அருகே அரூர் பகுதியில் உள்ள ஒரு கோவில் மண்டல பூஜைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன் பழனிசாமி தனது தந்தையை காணவில்லை என ஆன்லைன் மூலம் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் அரூர் பகுதியில் உள்ள கிணற்றில் முதியவர் பிணம் மிதப்பதாக மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாணை நடத்தினர். மேலும் தந்தை காணாமல் போனதாக புகார் அளித்த பழனிசாமியும் அங்கு வரவழைக்கப்பட்டார்.

இதையடுத்து பழனிசாமி கிணற்றில் பிணமாக மிதந்தது தனது தந்தை தான் என உறுதி செய்தார். இதையடுத்து அருணாசலத்தின் உடலலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கைசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முதியவர் கிணற்றில் விழுந்து இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story