மோட்டார் சைக்கிள் மோதி தறித்தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி தறித்தொழிலாளி சாவு
x

மோட்டார் சைக்கிள் மோதி தறித்தொழிலாளி சாவு

நாமக்கல்

வெண்ணந்தூர்:

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அத்தனூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). தறித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அத்தனூர் பஸ் நிறுத்தம் செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது வெண்ணந்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற கிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த அவரை பரிசோதித்த டாக்டர் கிருஷ்ணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இறந்தவரின் மனைவி லட்சுமி (66) வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் பாஷா என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story