பொட்டிரெட்டிப்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பிணமாக மீட்பு


பொட்டிரெட்டிப்பட்டியில்  மனநலம் பாதிக்கப்பட்டவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் செந்தில்குமார் (வயது 35). மனம் நலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் தனியாக இருந்து வந்தார். அவரது தாய், தந்தை இருவரும் வேறு ஒரு இடத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உணவு மட்டும் தனது தாய் வீட்டுக்கு சென்று சில சமயங்களில் வாங்கி வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி செந்தில்குமார் தனது தாய் வீட்டில் இருந்து சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தவர் சில நாட்களாக செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து அவருடைய தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினர் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது செந்தில்குமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து செந்தில்குமாரின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story