வாகனம் மோதி லாரி டிரைவர் சாவு


வாகனம் மோதி லாரி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 3 March 2023 12:30 AM IST (Updated: 3 March 2023 3:48 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சிகம்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 25). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி அவர் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து மினிலாரியில் பொருட்களை ஏற்றி கொண்டு சென்னைக்கு சென்றார்.

அப்போது குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது மினி லாரியின் முன்பக்க டயர் பஞ்சரானது. இதையடுத்து மினி லாரியை சாலையோரம் நிறுத்திய சிவலிங்கம் பஞ்சரான டயரை மாற்றுவதற்காக இறங்கியபோது அந்த வழியாக வந்த வாகனம் மோதி சிவலிங்கம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் இறந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story