ஆயில்பட்டி அருகே விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலி
நாமகிரிப்பேட்டை:
ஆயில்பட்டி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியாகினர்.
விவசாயி
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 57). விவசாயி. இவரும், உறவினரான செங்கமலை (55) என்பவரும் ஒரு மொபட்டில் மெட்டாலா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சின்னசாமி மகன் மனோஜ் (26), ஆனந்த் (19) ஆகியோர் முள்ளுக்குறிச்சிக்கு சென்றனர்.
இந்த நிலையில் மொபட்டும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு அய்யனார், செங்கலை படுகாயம் அடைந்தனர். மனோஜ், ஆனந்த் ஆகியோர் காயம் அடைந்தனர்.
விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆயில்பட்டி போலீசார் படுகாயம் அடைந்த அய்யனார், செங்கமலை ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனோஜ், ஆனந்த் ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யனார், செங்கமலை ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.