ஸ்கூட்டர்கள் மோதல்; முதியவர் சாவு
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 66). இவர் ராசிபுரம் பகுதியில் இருந்து அத்தனூர் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அத்தனூர் அருகே பழந்தின்னிப்பட்டி பகுதியை சேர்ந்த விஜயமூர்த்தி (44) என்பவர் ஸ்கூட்டரில் வெண்ணந்தூர் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அத்தனூர் அருகே வன விரிவாக்கம் மையம் பகுதியில் எதிர்பாராதவிதமாக 2 ஸ்கூட்டர்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சுபாஷ் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் இறந்தார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.